Page:Tamil proverbs.pdf/497

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
479
  1. மதில்மேல் இருக்கிற பூனைபோல் இருக்கிறான்.
    He is like a cat on a wall.
    Spoken of one who makes the most of his position.

  2. மது பிந்து கலகம்போல் இருக்கிறது.
    Like the uproar of a honey drop.

  3. மதுரைக்கு வழி வாயில் இருக்கிறது.
    The way to Madura is in the mouth.

  4. மந்திரம் கால் மதி முக்கால்.
    The incantation is one fourth, and common sense three fourths.

  5. மந்திரத்தில் மாங்காய் விழுமா?
    Will mangoes fall by a charm?

  6. மந்திரம் இல்லான் பூசை அந்தி படுமளவும்.
    Religious ceremonies not regulated by a form, will continue till sun-set.

  7. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
    It is the attribute of a minister to foretell things likely to occur.

  8. மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லாச் சேனையும் கெடும்.
    Decisions without councillors, and troops without arms, will perish.

  9. மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?
    Do you expect milk in the fold, and curds at home?

  10. மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.
    The damsel who has a fine head of hair, combs and dresses it.

  11. மயிர் ஊடாடாதார் நட்புச் சிறிதுபொருள் ஊடாடக் கெடும்.
    Friendship so close that a hair cannot be introdued between the parties, will be destroyed if money matters interpose.

  12. மயிர் சுட்டுக் கரியாகிறதா?
    Can charcoal be formed by burning hair?