Page:Tamil proverbs.pdf/499

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
481
  1. மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
    He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.

  2. மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
    He who planted the tree will water it.

  3. மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.
    He who was not respectful lost his reputation.

  4. மரியாள் குடித்தனம் சரியாய்ப்போச்சு.
    Mary’s domestic life has come to an end.

  5. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
    To a gloomy eye all obscure things are demons.

  6. மருத்து மாவுக்குச் சயிக்கினை, மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.
    A sign to a fleet horse, whipping to an obstinate one.

  7. மருந்து கால் மதி முக்கால்.
    Medicine one fourth, common sense three fourths.

  8. மருந்தும் விருந்தும் மூன்று நாள்.
    Three days for testing a medicine, and for a feast.

  9. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
    Though the quantity be little, like medicine, distribute before eating it.

  10. மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.
    It is said that what she cooked for her son-in-law she gave to her son, and was distressed about it.

  11. மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக்கொண்டதுபோல.
    Like remembering, when hungry, the food of the marriage feast.