Page:Tamil proverbs.pdf/500

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
482
பழமொழி.
  1. மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
    Does the barren woman understand the pains of parturition?

  2. மலடி அறிவாளா பிள்ளை அருமை?
    Does the barren woman know the endearments of children?

  3. மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
    If the barren woman be asked to bring forth a child, will she do so?

  4. மலரில் மணமும், எள்ளில் எண்ணையும், உடலில் உயிரும், கலந்தது போல.
    All pervading, like fragrance in a flower, oil in sesamum seed, and life in the body.

  5. மலிந்த பண்டம் கடையிலே வரும்.
    When commodities are abundant, they come to market.

  6. மலை அத்தனை சுவாமிக்குத் தினை அத்தனை புஷ்பம்.
    A flower, as small as a millet-seed, is dedicated to an idol as large as a mountain.

  7. மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?
    Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?

  8. மலை இலக்கானால் குருடனும் எய்வான்.
    If a mountain be the target, even a blind man may shoot.

  9. மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது.
    It is difficult to roll a stone to the top of a hill.

  10. மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே.
    Though you ascend the mountains, do not leave behind your brother-in-law, or the son of your maternal uncle.

  11. மலைத்தேன் முடவனுக்கு வருமா?
    Will mountain honey come to the lame man?