Page:Tamil proverbs.pdf/504

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
486
பழமொழி.
  1. மனத்துயர் அற்றோன் தினச்செபம் உற்றோன்.
    He who utters prayers daily has no anxiety of mind.

  2. மனம் கொண்டது மாளிகை.
    That which is agreeable to the mind is a palace.

  3. மனம் தடுமாறேல்.
    Be not confused.

  4. மனம் இருந்தும் சற்று வகை அற்றுப்போவான்.
    Although willing he will lack means.

  5. மனிதர் காணும் பொழுது மவுனம், இராதபொழுதில் உருத்திராக்ஷப்பூனை.
    Silent in the presence of men, in their absence a beaded cat.

  6. மனிதன் மறப்பான், குறைபடுவான், மாறுவான், போவான்.
    Man forgets, is reduced in circumstances, changes and vanishes.

  7. மனுஷன் தலையை மான் தலை ஆக்குகிறான் மான் தலையை மனுஷன் தலை ஆக்குகிறான்.
    He can transform a man’s head into the head of a deer, and he can make a man’s head out of a deer’s head.

  8. மனையாள் விடியுமுன் எழுந்து வீட்டுப் பண் செய்வாள்.
    A wife gets up before day-break and looks after her domestic affairs.

  9. மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.
    Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.

  10. மனோ வியாதிக்கு மருந்து உண்டா?
    Is there any remedy for mental sickness?

  11. மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.
    Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.