Page:Tamil proverbs.pdf/503

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
485
  1. மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையுமா?
    Can that be filled with a watering pot which cannot be filled by the rain?

  2. மழை முகம் காணாத பயிரும், தாய் முகம் காணாத பிள்ளையும்.
    Vegetation without rain, a child without a mother.

  3. மழையும் பிள்ளைப்பேறும் மகா தேவருக்கும் தெரியாது.
    Even Mahadéva does not know when it will rain, nor when a child will be born.

  4. மழை விட்டும் தூவானம் விட இல்லை.
    Though the rain has ceased, the drizzling has not.

  5. மறந்த உடைமை மக்களுக்கும் ஆகாது.
    An article forgotten is not good even for one’s children.

  6. மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?
    If one say, I died through forgetfulness, will life return?

  7. மனக்கசடு அற மாயை நாடேல்.
    Seek not empty pleasures to purify the heart.

  8. மனக் கவலை பலக் குறைவு.
    Mental anxiety will diminish one’s strength.

  9. மனச்சாட்சி குற்றுமேல் மறுசாட்சி வேண்டாம்.
    If the conscience condemn, other evidence is unnecessary.

  10. மனதிலே பகை உதட்டிலே உறவு.
    Enmity at heart, friendship on the lips.

  11. மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.
    A secret that should be concealed in the mind is uttered by a fool.

  12. மனதிற்கு மனதே சாட்சி, மற்றதற்குத் தெய்வமே சாட்சி.
    The heart is its own witness, God is the witness of the rest.

  13. மனது அறியாப் பொய் உண்டா?
    Can a mind be ignorant of its own falsehood?