Page:Tamil proverbs.pdf/517

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
499
  1. முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.
    He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.

  2. முப்பணி இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை.
    To the woman adorned with three jewels, the ear ornament is the only want.

  3. முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை.
    None ever continued to prosper or decay for thirty years.

  4. முப்பொருள் ஆதி மூலமானவன்.
    He is the triad who is the first and the last of all.

  5. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
    The industrious will never be put to shame.

  6. முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.
    A stubborn wife, a mat rolled up.

  7. முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?
    What if the murukku tree grow large, will it do for a pillar?

  8. முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?
    Will the mention of the murungai fruit affect a prescribed diet?

  9. முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.
    The one that nursed and brought up the child is Múdévi, the wife is Shridévi.

  10. முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?
    Is the pain in the breast of the nurse, known to the suckling?

  11. முழங்கையிற் பட்ட சுகம்போல.
    Like the pleasure experienced when the elbow is struck.