Page:Tamil proverbs.pdf/518

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
500
பழமொழி.
  1. முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.
    It is thirty days since he bathed, and he says that he is so clean that touching salt would defile him.

  2. முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.
    Like arming a hog in the snout with a ploughshare, that can tare up the ground without it.

  3. முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.
    A perfect sluggard is like a hedge of thorns.

  4. முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.
    He whose share is only one three hundred and twentieth part, is more persistent than he who has a whole one.

  5. முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.
    Like attempting to conceal a whole pumpkin in a plate of rice.

  6. முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமோ?
    Does a gemmed ferrule require an ornamental rim?

  7. முளைத்த மயிர் மூன்று அதிலும் இரண்டு புழுவெட்டு.
    His beard consists of three hairs, of which two are rotten at the root.

  8. முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாரிகொண்டு வெட்ட வேண்டும்.
    That which was not nipped in the bud will have to be felled with an axe when matured.

  9. முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.
    Thorns are extracted by thorns.

  10. முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.
    By nature the thorn is sharp, and the tulasi fragrant.