Page:Tamil proverbs.pdf/519

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
501
  1. முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?
    Who sharpens the point of a thorn?

  2. முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
    If a cloth be spread on a thorn bush, it must be taken off with great care.

  3. முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.
    Though one may endure being struck with a sieve, he cannot endure being brow-beaten.

  4. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
    What is done in the forenoon will result in good or evil in the afternoon.

  5. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
    Do those who are drenched complain of being wet?

  6. முனைமுகத்து நில்லேல்.
    Do not stand in the face of a battle.

  7. முன் அளந்த நாழி பின் அளங்கும்.
    The same measure that was used before, must be used afterwards.

  8. முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.
    Do not say one thing and do another.

  9. முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
    If the fore-arm be stretched, the elbow will be so also.

  10. முன் கோபம் பின் இரக்கம்.
    Anger first, and pity afterwards.

  11. முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?
    Having given one the lead, will you follow and cut his throat?

  12. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
    If the eternal be with you, will anything be impossible?