Page:Tamil proverbs.pdf/520

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
502
பழமொழி.
  1. முன்னேபோனால் கடிக்கிறது பின்னேபோனால் உதைக்கிறது.
    Biting before, and kicking behind.

  2. முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.
    Look before, look behind, look at yourself, look at me.

  3. முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.
    When you go before you are guilty of infanticide, when you follow you are guilty of brahmanicide.

  4. முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.
    In the forenoon a ship owner, in the afternoon a beggar.

  5. முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.
    The horn that came after, is stronger than the ear that came before.

மூ.

  1. மூக்கிவிக்குக் கண்ணாடி காட்டினது போல.
    Like showing a noseless man a mirror.

  2. மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.
    If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.

  3. மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.
    A crop-nosed ass does not fear driving rain.

  4. மூக்குப் புண்ணாளி அல்லவோ தாசரி ஆகவேண்டும்?
    A man with a sore nose ought to become a Vaishnava mendicant, ought he not?

  5. மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.
    The pain will be felt as keenly as when the hair in the nose is plucked out.