Page:Tamil proverbs.pdf/52

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
34
பழமொழி.
  1. அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.
    The sickle must be moved, and the landlord’s family must be ruined.

  2. அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
    Is it attempted to remove the heat of a burning fever as if it were that of a sickle?

  3. அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.
    Was it the dexterity of the reaper, or the sharpness of the sickle.
    Success in an enterprise is mainly owing to tho means employed.

  4. அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.
    He who listens to the words of a woman will be accounted worthless.

  5. அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.
    Although the fruit of the wood-apple tree (Feronia elephantum) close by ripens, bats will not approach it.

  6. அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றாலாம்.
    The haughty dame is said to have brought forth a monkey child.

  7. அருக்காணிமுத்துக் கரிக்கோலமானால்.
    She who was a precious pearl has become black as coal.

  8. அருக்காமணியா முருக்கம்பூவா?
    Is it a rare gem or a Murukkam flower?

  9. அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.
    Through severe drought every blade has perished.

  10. அருட்செல்வம் ஆருக்கும் உண்டு, பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை.
    Divine favour is common to all, material wealth is not.

  11. அருணாம்பரமே கருணாம்பரம்.
    A cloth tinged red indicates the divine favour.
    Refers to the dress of religious mendicants.