Page:Tamil proverbs.pdf/53

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
35
  1. அருமை அறியாதவன் ஆண்டு என்ன, மாண்டு என்ன?
    What matters it whether he who has no discrimination rules or dies?

  2. அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.
    If it must be so, let the head of my son-in-law go; but the old mortar must not go.
    Said of things which long possession has made peculiarly precious,

  3. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது.
    Even a buffalo will not abide in a house where it is not regarded.

  4. அரும் சுனை நீர் உண்டால், அப்பொழுதே ரோகம்.
    The drinking of water from a hill reservoir will at once produce disease.

  5. அருள் வேணும், பொருள் வேணும், அடக்கம் வேணும்.
    Kindness, wealth and self-restraint are essentials. _

  6. அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம்பொன் கொடுத்தாலும் கிடையாது.
    Chastity forfeited for half a cash, cannot be recovered though one should give thousands of gold.

  7. அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
    The honour that has been forfeited for half a cash, will not return though one give thousands.

  8. அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.
    Though sandal wood be rubbed, its fragrance will not be destroyed.

  9. அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.
    The water in a pot half full wabbles, if full it wabbles not.

  10. அரைச்சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல.
    As one leaped over an Erukku leaf, Calotropis gigantea, under which he had concealed half a challi.
    A challi is a small copper coin, a fractional part of a larger coin.