Page:Tamil proverbs.pdf/54

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
36
பழமொழி.
  1. அரைச்சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
    Is the hand to be complimented for tying the waist-cloth?

  2. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமோ?
    Can one go before an assembly with half a word?

  3. அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச்சொல் முழுச்சொல்லாகும்.
    Half a word admitted into the assembly becomes a whole word.

  4. அரைத்த பயறு முளைத்தாற்போல.
    As if macerated gram should sprout.

  5. அரைத்து மீந்தது அம்மி சிரைத்து மீந்தது குடுமி.
    After grinding the stone remains; after shaving the head, the kudumi (tuft of hair) remains.
    A tuft of hair left on the head of a boy or man with a knot at the end. It is considered becoming; and is usually about a foot in length.

  6. அரைப்பணம் கொடுத்து அழச்சொல்லி ஒருபணம் கொடுத்து ஓயச்சொல்லுவானேன்?
    Having given half a fanam to weep, why give a fanam to ease?
    Fanam—a small coin of gold or silver,

  7. அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா?
    Though the service bring half a fanam, will it be equal to service in the king’s house?

  8. அரைப்பணம் கொடுக்கப் பால்மாறி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை.
    A story of one who gave fifty gold pieces for a compound medicine after having hesitated to give half a fanam.

  9. அரையிற் புண்ணும் அண்டைவீட்டுக் கடனும் ஆகாது.
    Sores about the waist, and debt to one’s neighbour are both bad.