Page:Tamil proverbs.pdf/55

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
37
  1. அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
    If one goes before an assembly with half learning will it become perfect?

  2. அலுத்துப் பிலுத்து அக்காள் வீட்டுக்குப் போனால் அக்காள் இழுத்து மச்சானிடத்திற் போட்டாளாம்.
    When he went to his elder sister’s wearied and exhausted, it is said that she sent him to his brother-in-law.

  3. அலை எப்பொழுது ஒழியும், தலை எப்பொழுது முழுகுகிறது?
    When will the waves be still, when will he wash his head?

  4. அலை மோதும்போதே தலை முழுகுகிறது.
    Bathing in the midst of beating waves.
    Said of attempting to do a thing under adverse circumstances,

  5. அலைவாய்த் துரும்புபோல.
    Like a straw on a wave.

  6. அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறதுபோல.
    Showing his teeth like a jackal of the ginger fields.
    Said of one who shows signs of disappointment.

  7. அல்லவை தேய அறம் பெருகும்.
    As vice wanes, virtue waxes.

  8. அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.
    The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.)

  9. அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
    A bed free from anxiety is the most agreeable of all things.

  10. அல்லல் அருளாள்வார்க்கில்லை.
    The kind-hearted are free from sorrow.

  11. அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.
    A time for adversity, and a time for prosperity.