Page:Tamil proverbs.pdf/56

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
38
பழமொழி.
  1. அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
    Pour toddy into the mouth of the wicked.
    Add fuel to the fire.

  2. அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.
    Ill-gotten wealth and illicit pleasure are both bad.

  3. அல்லும் பகலும் அழுக்கறக் கல்.
    Study day and night to be free from impurity.

  4. அவகடம் உள்ளவன் அருமை அறியான்.
    A wily man does not know the value (of friendship.)

  5. அவகுணக்காரன் ஆகாசமாவான்.
    The vicious will evaporate into thin air.

  6. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
    The hasty are deficient in sense.

  7. அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.
    For hasty ornamentation I take up and sprinkle.

  8. அவசரத்தில் உபசாரமா?
    Is ceremonious behaviour demanded when one is in a hurry?

  9. அவசரத்திற்குப் பாவம் இல்லை.
    A thing done in an emergency is-not criminal.

  10. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.
    When in haste the hand will not enter even into a large chatty.

  11. அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.
    She is inclined to play the harlot, and is afraid that her husband will beat her.