Page:Tamil proverbs.pdf/525

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
507
  1. மெழுகின வீட்டிலே நாய் புகுந்ததுபோல.
    As a dog entered a house whose floor was smeared with cow-dung.

மே.

  1. மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும், மெத்தனக்காரருக் கிருபை அளிக்கவேண்டும்.
    Submit not to the haughty, and to the humble shew pity.

  2. மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.
    It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.

  3. மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?
    Do cattle going to graze, carry grass tied to their horns?

  4. மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.
    As the cow that grazes is interrupted by the one tha3t licks it.

  5. மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.
    It is said that the braying ass interrupted the ass that was grazing.

  6. மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.
    He who praises the cowherd.

  7. மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.
    If I am to rule I must rule over my sister-in-law, otherwise I shall go on a pilgrimage.

  8. மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
    I will tend the donkeys, or go on a pilgrimage.