Page:Tamil proverbs.pdf/526

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
508
பழமொழி.
  1. மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.
    He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.

  2. மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.
    I will marry some time hence; be still till then, my neck.

  3. மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.
    Those who plough late will cry for want of food.

  4. மேழிச் செல்வம் கோழைபடாது.
    The wealth of the plough is unfailing.

  5. மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.
    Sages are intent upon self-denial.

  6. மேன்மக்கள் சொற் கேள்.
    Listen to the words of the great.

  7. மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.
    The most excellent is the possessor of the highest state of bliss.

மை.

  1. மை கரையாமல் முதுகு ஆட்டு.
    Rub your back without spoiling the paint.

  2. மைவிழியாடனைக் கையகன்றொழுகு.
    Live far removed from prostitutes who paint their eye-lids.

  3. மைவிழியார் மனையகல்
    Avoid the house of a prostitute.