Page:Tamil proverbs.pdf/528

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
510
பழமொழி.
  1. மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
    A promise breaker is in the wrong way.

  2. மொழி தவறாதான் வழி தவறாதான்
    He who is true to his word, swerves not from rectitude.

  3. மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.
    If one break his promise, his undertaking will fail.

  4. மொழிவது அற மொழி.
    Speak decisively.

மோ.

  1. மோகத்தை முனி.
    Renounce lust.

  2. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.
    Lust continues thirty days, desire sixty days.

  3. மோகனக் கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா?
    Will not even a door-step break under excessive pressure?

  4. மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.
    Danger slumbers on a mat.

  5. மோந்துகொள்வதுபோல் கடிக்கிறது.
    To bite when apparently kissing.

  6. மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ?
    When going for buttermilk why carry the pot concealed behind you?

  7. மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?
    Why conceal the vessel when going for buttermilk?

  8. மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல
    As a linga was tied to the neck of a buttermilk seller.