Page:Tamil proverbs.pdf/529

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
511
  1. மோனம் என்பது ஞானவரம்பு.
    Silence is the bulwark of wisdom.

மௌ.

  1. மௌனம் கலக நாசம்
    Silence puts an end to quarrels.

  2. மௌனி குடியைக் கெடுப்பான்
    A reserved woman will destroy her family.

யா.

  1. யாதி முற்றினால் வியாதி.
    Matured meditation ends in disease.

  2. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும், பூனை கறுத்தால் என்ன பெறும்?
    A black elephant is worth a thousand gold peices, what will a black cat fetch?

  3. யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.
    Sixty feet from an elephant, seventy from a dwarf.

  4. யானை தன் தலையிலே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்கிறது போல.
    As an elephant throws sand on its head.

  5. யானை தின்ற விளாங்கனிபோல்.
    Like a blighted wood-apple.

  6. யானை மிதிக்கப் பிழைப்பார்களா?
    Will they survive who have been trampled on by an elephant?

  7. யானைமுன்னே முயல் முக்கினதுபோல.
    As a hare strained itself before an elephant.