Page:Tamil proverbs.pdf/530

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
512
பழமொழி.
  1. யானைமுதலான பெரிய ஜெந்துக்கள் தாழ விழுந்தால் பிழைக்கா; அதுபோல, பெரியோர் கீழே விழுந்தால் தேறமாட்டார்.
    Large beasts such as elephants &c., when they fall down from a high place, live not, so are the great.

  2. யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?
    Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?

  3. யானையைத் தேடக் குடத்துக்குட் கை வைத்தது போல.
    As one put his hand into a jar when he was seeking an elephant.

யு.

  1. யுகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா?
    Suppose it rain to the end of the Yuga, will a potsherd be thereby dissolved?

ர.

  1. ரண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்த்தது.
    It turned out to be a kid that had sucked two dams.

ல.

  1. லங்கணம் மரம் ஔஷதம்.
    Abstinence is the best medicine.

லோ.

  1. லோபிக்கு இரு செலவு.
    Double expense to the niggard.