Page:Tamil proverbs.pdf/533

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
515
  1. வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை
    The story of a Telugu man and a Tamil man, cultivating jointly.

  2. வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.
    A Telugu man does not understand Tamil, he will call vaikól kásu.

  3. வடுகு கொழுத்தால் வறை ஓட்டிற்கும் ஆகாது.
    If a Telugu man prosper, he is of no use to any one.

  4. வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.
    The slave has become small, the corn-stack is thrashed into paddy.

  5. வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா ?
    Did she tell you to eat the cakes, or to count the holes in them?

  6. வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.
    Although you go round, you must come in by the entrance.

  7. வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.
    Excessive desire after interest, destroyed the capital.

  8. வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?
    Is compound interest uncommon?

  9. வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.
    The speed at which interest accumulates is greater than that of a car.

  10. வட்டுவத்தின்மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்தரமா படும்?
    Will a slap on a betel-pouch, affect the pouch only?

  11. வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
    A bent bow will do mischief.

  12. வணங்கின முள் தைக்காது.
    A pliant thorn will not penetrate.