Page:Tamil proverbs.pdf/534

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
516
பழமொழி.
  1. வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.
    To trade is the beauty of merchants.

  2. வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.
    A cart may be seen on a boat, and a boat on a cart.

  3. வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
    As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one’s character when he is at a distance.

  4. வண்டு ஏறாத மரம் இல்லை.
    There is no tree that cannot be bored by a beetle.

  5. வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
    He sings an unmelodious tune.

  6. வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
    If a washerman is sick, he gets better at the washing stone.

  7. வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
    What friendship has a washerman with one who wears no clothes?

  8. வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.
    The washerman longs for the washer-woman, and the washer-woman’s desire is fixed on her donkey.

  9. வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.
    A change of garments in the hands of the washerman.

  10. வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா ?
    Having put your clothes to the washerman, do you chase the crane?

  11. வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
    If the washerman’s child die, the barber cares not a hair.