Page:Tamil proverbs.pdf/540

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
522
பழமொழி.
  1. வலையிற் சிக்கிக்கொண்ட மான்.
    An ensnared deer.

  2. வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.
    Mother-in-law, give an account of the violent quarrel.

  3. வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்
    The top thrown by the strong will spin even in sand.

  4. வல்லமை பேசேல்.
    Boast not of thy power.

  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
    Even a blade of grass is a weapon to the strong.

  6. வல்லவனுக்குப் புல் ஆயுதம்.
    Grass is a weapon to the strong man.

  7. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
    Every powerful man in the world has his rival.

  8. வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
    When the powerful fail, the brave will surely welcome them.

  9. வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.
    The spoils of the strong will soon go to waste as a plantain.

  10. வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.
    A dear-bought cloth, and a low-priced bull are useless.

  11. வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
    When one bat visits another, the host will say, you hang, and I will do the same.

  12. வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.
    He who waylays and plunders is a thief, the vehicle of Vishnu is the hawk.