Page:Tamil proverbs.pdf/539

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
521
  1. வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.
    Though one labours never so hard, the desired good will only be obtained in its time.

  2. வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.
    As the after-wise, rejected the advice of the fore-sighted.

  3. வருவது சொன்னேன் படுவது படு.
    I predicted the consequence, suffer what you have to suffer.

  4. வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.
    If that which was to come is come, endurance is necessary.

  5. வருவான் குருடன் விழுவான் கிணற்றிலே.
    The blind man will come and he will fall into the well.

  6. வலிமைக்கு வழக்கு இல்லை
    Power admits of no disputes.

  7. வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.
    If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.

  8. வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
    Should the goddess of prosperity who came to you spontaneously, be kicked and turned out?

  9. வலியவன் எடுத்தது வழி.
    The strong man’s way is the way.

  10. வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.
    When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.

  11. வலியவன் வெட்டினதே வாய்க்கால்.
    That is the channel which was cut by the strong man.