Page:Tamil proverbs.pdf/538

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
520
பழமொழி.
  1. வரப்போ தலைக்கு அணை வாய்க்காலோ பஞ்சு மெத்தை.
    The ridge of the field, his pillow; the channel, his cotton mattress.

  2. வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர முடி உயரும்.
    As the ridges rise the water will rise; as the water rises the paddy will grow, as paddy flourishes, the population will increase; as that increases the crown will rise.

  3. வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.
    When the fields are full of water, paddy will rise, when paddy rises the farmer's authority will rise.

  4. வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
    In the course of time the mother-in-law became a donkey.

  5. வரவுக்குத் தகுந்த செலவு.
    Expense according to one’s income.

  6. வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.
    The income small, the labour great.

  7. வரி போடேல் கேட்டைத் தேடேல்.
    Do not impose taxes, do not cause evil.

  8. வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.
    Neither respect nor rice.

  9. வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.
    When coming, all comes unsought, and having come, all goes at once.

  10. வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ ?
    Will clouds shower on a select few?

  11. வருந்தினால் வராதது ஒன்று இல்லை.
    Nothing is unattainable when steadily pursued.