Page:Tamil proverbs.pdf/553

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
535
  1. விதியை மதியால் தடுக்கலாமா?
    Can destiny be averted by prescience?

  2. விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்
    A boaster if he die, cannot return to life.

  3. வித்து இல்லாச் சம்பிரதாயம் மேலும் இல்லைக் கீழும் இல்லை.
    Out of nothing, nothing comes, whether above or below.

  4. வித்துவானுக்கு எது பரதேசம்?
    What country is foreign to a man of learning?

  5. வித்துவான்களுக்கு எது பெரிது?
    What is difficult to the learned?

  6. வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம் கற்றாழை முள்வந்து கொத்தோடே தைத்ததாம்.
    The sapient old mother-in-law is said to have got foul of the thorny cactus, when she went to gather firewood.

  7. வித்தை அற்றவன் அழகு வாசனை இல்லா முருக்கம் பூப்போல.
    The beauty of the unlettered, is like the inodorous Muruku flower.

  8. வித்தை விரும்பு.
    Desire learning.

  9. வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
    She is a hypocrite, and idle;—she is that old thief that sold págal fruit.

  10. வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.
    O thou pretending mother-in-law, cakes stick in my throat.

  11. வித்தையில் எளியது சூனியம், பன்னத்திலே எளியது நீற்றுப்பெட்டி.
    Of arts sorcery is the easiest, of textures the pastry boiling basket.