Page:Tamil proverbs.pdf/552

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
534
பழமொழி.
  1. விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.
    Unceasing driving rain is preferable to intermitted showers.

  2. விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
    The pleasure of the wood-apple ceases with the shell.

  3. விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்.
    It is said that he who went to point out the heavens, returned to shew his eyes.

  4. விண்ணாணம் எங்கே, கின்னரம் எங்கே?
    What is become of your ostentation, and where is your guitar?

  5. விண்ணுமாலைக்குக் கலியாணம் விழுந்து கொட்டடா சாம்புவா.
    O, thou tomtom beater, Vinumal is to be married, fall down and beat your tomtom.

  6. விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
    One may escape a thunderbolt, but he cannot escape the effects of an evil eye.

  7. விண்தொடு கொடிமூடி மேருவும் வீறளி தென்திசைக் கிரியும்.
    Meru whose summit reaches to heaven, and the merit giving mountain on the south.

  8. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
    If the sky fail, the earth will fail.

  9. விண் வலிதோ மண் வலிதோ?
    Which is the more powerful heaven or earth?

  10. விதி போகிற வழியே மதி போகும்.
    The mind will follow destiny.

  11. விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.
    A viper will bite him whose prescribed term of life is at an end.