Page:Tamil proverbs.pdf/551

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
533
  1. விடாச்சுரத்துக்கு விஷ்ணுகரந்தை.
    Vishnukarantai-Sphœranthus Indicus-is a specific remedy for fever.

  2. விடாத மழை பெய்தால் படாத பாடு படவேண்டும்.
    Should it rain unceasingly, intolerable suffering would follow.

  3. விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
    Unceasing rain stops leaks.

  4. விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும் பெண் குருடும்.
    It will be known at day-break whether the bridegroom or the bride is blind.

  5. விடிந்தும் பெண்ணுக்கு முட்டாக்கோ?
    Does the woman require a veil even after sunrise?

  6. விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.
    As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.

  7. விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.
    The marriage will take place at dawn, thou fellow, take betel.

  8. விடியா மூஞ்சிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது.
    Though the unfortunate may find work, he will not get his hire.

  9. விடியுமட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி.
    He that draws water till day-break, and he that breaks his bucket at day-break, are on an equality.

  10. விடியுமட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது.
    Though it may rain till day-break, a potsherd will not germinate.

  11. விட்டிற்பூச்சியைப்போல் பறந்து திரிகிறான்.
    He flits about like a grass-hopper.