Page:Tamil proverbs.pdf/562

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
544
பழமொழி.
  1. வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.
    Another name for a wife is the mistress of the house.

  2. வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.
    At home, a hero, abroad, a coward.

  3. வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.
    The door-ways of opposite houses must not be over against each other.

  4. வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.
    A lamp lit in a house for the inmates may answer for a feast.

  5. வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர்.
    A buffaloa makes a house prosper, a corn-stack makes high ground conspicuous.

  6. வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவுகோல்.
    One step as an entrance to the house, and one key to a lock.

  7. வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண்சாதி கரும்பும்.
    The wife is a margosa tree, the mistress sugar-cane.

  8. வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்ததுபோல.
    Like building a house, and allowing a monkey to dwell therein.

  9. வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.
    Watch your house, and manage your affairs.

  10. வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்.
    Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.

  11. வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும் வீணாதிவீணனுக்கு ஐந்து பணம் எப்படி வரும்?
    Although he may pull down his house and use it for firewood, a notorious idler can never get five fanams?