Page:Tamil proverbs.pdf/574

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
556
பழமொழி.
  1. வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை.
    Enmity exists among dancing masters and among harlots.

  2. வேடக்காரா வேடம் விடடா, ஓடக்காரா ஓடம் விடடா.
    Thou hypocrite, quit thine hypocrisy, thou boatman, steer the boat.

  3. வேடத்தில் நாலு விதம் உண்டு.
    Of disguises there are four kinds.

  4. வேடத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?
    What avail special forms, what avails white ashes?

  5. வேடமோ தவவேடம் மனதிலோ அவவேடம்.
    In appearance an ascetic, at heart a cheat.

  6. வேடம் மூன்று வகை.
    There are three forms of disguise.

  7. வேடம் அழிந்துபோம்.
    Disguises will perish.

  8. வேடம் கூடமும் கொள்ளாது.
    His pretence is such that a room cannot contain it.

  9. வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.
    Foresters’ favourite sport is bare hunting.

  10. வேடருக்கு தேன் பஞ்சமா, மூடருக்கு அடி பஞ்சமா?
    Is honey rare among foresters, or chastisement to fools?

  11. வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.
    In a village where there are no hunters, all kinds of beasts may be found.

  12. வேடர்களில் மலைவேடர் விசேஷம்.
    Of hunters those that inhabit hill tracts, are the moat distinguished.

  13. வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டுபோல்.
    As a bee-hive in the hands a forester.