Page:Tamil proverbs.pdf/578

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
560
பழமொழி.
  1. வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.
    Roots, wood, and fruit are all drugs.

  2. வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.
    I am become a thorn of the vél,-Acacia arabica-and a fruit of the banyan.

  3. வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.
    The vél tree casts no shade, the Vellala has no friendships.

  4. வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.
    The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.

  5. வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.
    Twelve kalams of seed corn for one veli of land.
    A veli is nearly equal to five acres.

  6. வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.
    For every veli two yokes of oxen and two ploughmen are required.

  7. வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி.
    The chamelion is the witness of the hedge, the cook boy will testify to the food being well boiled.

  8. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.
    The thorns collected for a hedge, have proved injurious to the feet.

  9. வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
    If the hedge consume the crop, how is the harvest to be obtained?

  10. வேலிலும் நாலு பலன் உண்டு.
    Even a vél tree is useful in four ways.

  11. வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.
    Plants not protected by a hedge, and an oil-monger who does not work a press, are out of place.