Page:Tamil proverbs.pdf/70

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
52
பழமொழி.
  1. அறிவு இல்லாதவன் பெண்டுகளிடத்தில் தாழ்வுபடுவான்.
    An ignorant man is despised even by women.

  2. அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
    So to sleep as to be incapable of feeling is an impossibility.

  3. அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.
    He that increaseth knowledge increaseth sorrow.

  4. அறிவு இல்லார்க்கு ஆண்மையும் இல்லை.
    The ignorant are not manly.

  5. அறிவு புறம்போய உலண்டதுபோல.
    As a chrysalis destitute of intelligence.

  6. அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
    Wisdom is regulated by knowledge, good conduct by love.

  7. அறிவு மனதை அரிக்கும்.
    Conscious guilt will fret the heart.

  8. அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.
    A mouth that instructs and a tongue uttering words of love.
    Spoken of one characterized by wisdom and love.

  9. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
    Even a king will approve of wise men.

  10. அறிவுடையாரை அடுத்தாற் போதும்.
    To obtain the favour of the wise is enough.

  11. அறிவேன் அறிவேன் ஆவிலை புளியிலைபோல் இருக்கும்.
    I know, I know (i.e., I know it well) the leaf of the banyan tree is like that of the tamarind tree.

  12. அறுக்கமாட்டாதவன் அரையில் ஐம்பத்தெட்டு அரிவாள்.
    Fifty-eight sickles on the hip of one that cannot reap.
    Used in contempt of mere show and parade.