Page:Tamil proverbs.pdf/71

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
53
  1. அறுதவி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை.
    The son of a widow has evil gestures throughout his body.
    Said of persons irreclaimably and naturally vicious.

  2. அறுத்த கோழி துடிக்குமாப்போல.
    Fluttering as a fowl with its throat cut.

  3. அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்ற கதை
    The story of a widow who gave birth to a son.

  4. அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
    Seventy rags for sixty days.

  5. அறுபத்துநாலு அடிக் கம்பத்தின்மேல் ஆடினாலும், கீழே வந்து தியாகம் வாங்க வேண்டும்.
    Although one may balance himself on a pole sixty-four feet high, he has to descend to receive gifts.

  6. அறுபத்தெட்டுக் கோரம்பலம்.
    Sixty-eight tricks.
    Said of the various impediments which one meets with in carrying out a scheme.

  7. அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.
    In harvest time even a rat has five wives.

  8. அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்கு கொதி பெரிது.
    The mouth of the rice-pot being enlarged by fracture, the rice must be boiled the longer.

  9. அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
    One must appear in the assembly, must he not, after having practised privately?

  10. அறையில் இருக்கிறவர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன்.
    One who leads private persons into a place of justice and perverts judgment.

  11. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
    The least unlawful desire destroys a myriad acts of austerity.