Page:Tamil proverbs.pdf/72

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
54
பழமொழி.
  1. அற்பத்தில் அழகு குலைகிறதா?
    Is beauty (self-respect) to be forfeited for a mere trifle?

  2. அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்.
    Although the broom is inferior it will lay the dust in the house.

  3. அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்.
    The friendship of the mean will issue in fatal results.

  4. அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.
    The friendship of the base is dangerous.

  5. அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.
    If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.

  6. அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்.
    When a mean person acquires wealth he knows not how to take care of it.

  7. அற்றத்துக்கு உற்றதாய்.
    Fitted to the opportunity.

  8. அனல் குளிர் வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்திற்குள் அடக்கம்.
    Three kinds of weather, hot, cold and temperate are included in the six seasons.
    A year is divided into six seasons of two months each, beginning with August. The names of the seasons are 1. கார் cloudy. 2 கூதிர் cold. 3. முன்பனி evening dew. 4. பின்பனி morning dew. 5. இளவேனில் mild heat. 6. முதுவேனில் very hot.

  9. அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.
    Even a common medicine may prove effectual after a disease has passed the crisis.