Page:Tamil proverbs.pdf/73

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
55
  1. அன்பற்ற மாமியாருக்கு கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்.
    The touch whether of the foot or the hand is an offence to one’s unkind mother-in-law.

  2. அன்பற்ற மாமியாருக்கு கும்பிடும் குற்றந்தான்.
    Even obeisance is an offence to an unloving mother-in-law.

  3. அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.
    Don’t enter the portal of the uncharitable.

  4. அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.
    Know a loving friend in adversity.

  5. அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.
    They who are destitute of love are void of influence.

  6. அன்புள்ள குணம் அலையில்லா நதி.
    A loving disposition is a river without a ripple.

  7. அன்பு இருந்தால் ஆகாதும் ஆகும்.
    Where love reigns the impossible may be attained.

  8. அன்புடையானைக் கொடுத்து அலையச்சே அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை.
    The story of a neighbour who invited a woman in distress at the loss of her husband.

  9. அன்பே பிரதானம் அதுவே வெகுமானம்.
    Love is all-important, and it is it’s own reward.

  10. அன்றற ஆயிரம் பொன்னிலும், நின்றற ஒரு காசு பெரிது.
    A single cash saved is greater than thousands of gold spent as soon as acquired.

  11. அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது.
    Pay at once, delay is bad.