Page:Tamil proverbs.pdf/97

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
79
  1. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
    As the banyan and the acacia strengthen the teeth, so Náladiyar and Kural give force to speech.
    Náladiyar and Kural two celebrated poetic works on moral subjects.

  2. ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.
    I am become a bruised reed tossed on the waves.

  3. ஆலையம் அறியாது ஓதிய வேதம்.
    The temple understands not the hidden meaning of the Vedas.

  4. ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூச் சர்க்கரை.
    The flowers of the olive, Bassia, are regarded as sugar in a place without a sugar-cane mill.

  5. ஆலை விழுது தாங்குகிறாப்போலே
    As the pendulous roots of its branches support the banyan tree.

  6. ஆல் பழுத்தால் அங்கே அரசு பழுத்தால் இங்கே.
    If the banyan be in fruit, thither, if the arasu, hither, the birds flock.

  7. ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.
    May you prosper as the banyan with its daughter-stems, take root like the wide-spreading arugu grass, and as the bamboo amid unfailing friends.
    A congratulatory expression to a newly married couple.

  8. ஆவணிமாதம் அழுகல் தூற்றல்.
    The month of August is attended with incessant drizzling.

  9. ஆவத்தை அடரான் பாவத்தை தொடரான்.
    He is not subject to calamity who pursues not a sinful course.

  10. ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்?.
    What avails mere desire, he will live, will he not, if he swallows rice?