Tamil Proverbs/கெ

From Wikisource
Jump to navigation Jump to search
Tamil Proverbs
translated by Peter Percival
கெ
3797253Tamil Proverbs — கெPeter Percival

கெ.

  1. கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.
    They will listen to the advice of the wicked when their star is not favourable.

  2. கெடு குடி சொற் கேளாது.
    A decaying family will not listen to advic.e.

  3. கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
    When you mediate another's ruin, your own will soon follow.

  4. கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
    Learning can suffer no damage.

  5. கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்.
    The deity will destroy those that injure others.

  6. கெடுப்பதும் வாயால் படிப்பதும் வாயால்.
    It is with the mouth we injure others; it is with the mouth we read.

  7. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
    One is blind to his own imprudence.

  8. கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
    Make a pitfall for imprudence.

  9. கெடுவாய் கேடு நினையாதே.
    Thou wilt be ruined, think not of destroying another.

  10. கெடுவான் கேடு நினைப்பான்.
    He who is on the way to ruin, will mediate another's ruin.

  11. கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினது போல.
    As a crane in an evil time seized and swallowed a keliru fish.

  12. கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.
    The wretched dog feels satisfied with the beating he received.

  13. கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
    A village doomed to ruin profits not by repeated precaution.

  14. கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?
    Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?

  15. கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
    Will curdled milk become sweet again?

  16. கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.
    I have had enough of loss, sufferings and toil in watering the vegetable garden.

  17. கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.
    A vicious child in a poor family.

  18. கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.
    A child is born under the star kèttai in a poor family.

  19. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
    A vicious donkey has mischievous propensities.

  20. கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.
    The family is ruined, do not fail to get the interest without reduction.

  21. கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகுசாற்றை.
    No matter whose family is ruined, you drink the pepper water.

  22. கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.
    The decaying family will be ruined. It will hit the leg which is already struck.

  23. கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.
    You may procure eight cows before you can recover one that has strayed.

  24. கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.
    He who pursues a vicious course will try to lead others into the same.

  25. கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
    The impoverished have no friends even among their own kindred.

  26. கெட்டார் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.
    When the ruined in circumstances flourish they cast out innumerable branches; when the prosperous are reduced to poverty they are not worth a potsherd.

  27. கெட்டான் பயல் பொட்டலிலே, விழுந்தான் பயல் சறுக்கலிலே.
    The boy suffered by walking in the arid tract, he fell in the slippery ground.

  28. கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.
    Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn.

  29. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.
    The deception of the clever will be manifest in eight days.

  30. கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.
    The clever fear nothing; the fool gains nothing.

  31. கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.
    The reputation of the adroit lasts only eight days.

  32. கெட்டும் பட்டணம் சேர்.
    Though you are ruined, cling to the city.

  33. கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?
    When the time of destruction comes, will not evil devices operate?

  34. கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.
    Like giving a dying cow to a poor Brahman.

  35. கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
    Can a family survive repeated misfortunes?

  36. கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.
    Baiting with a small fish and catching a large one.

  37. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
    If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.

  38. கெலியன் பாற் சோறு கண்டதுபோல.
    As the greedy saw milk and rice.