Page:Tamil proverbs.pdf/107

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
89
  1. ஆனை காணாமற்போனாற் குண்டுச்சட்டியில் தேடினால் அகப்படுமோ ?
    If an elephant be lost, is it to be sought in an earthen pot?

  2. ஆனை குண்டுச் சட்டியினும் குழிசியினும் உண்டோ ?
    Is the elephant in the rice-pot or in the water-pot?

  3. ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேட்கிறதா ?
    What, does the mouth that asked for an elephant ask for a lamb?

  4. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா ?
    Having given the elephant is there a dispute about the goad?

  5. ஆனை கொடிற்றில் அடக்குகிறதுபோல எந்தமட்டும் அடக்குகிறது ?
    How long shall I conceal it as an elephant incloses a thing in his jaws?

  6. ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
    The deceit of an elephant and the thievishness of a cat.

  7. ஆனைக்கு அறுபது முழம் அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
    Keep away from an elephant sixty cubits, and from a dwarf seventy cubits.

  8. ஆனைக்கும் பானைக்கும் சரி.
    The same reason is applicable alike to elephants and earthen pots.

  9. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
    The elephant and tiger are afraid of fire.

  10. ஆனைக்கும் அடி சறுக்கும்.
    Even an elephant may slip.

  11. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா ?
    Will a lamb be famished in a place where elephants are fed?

  12. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்ததுபோல.
    As if a lion had entered a herd of elephants.