Page:Tamil proverbs.pdf/108

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.

90

பழமொழி.

  1. ஆனைக்குத் தேரை ஊணா ?
    Are toads fit for elephant’s food?

  2. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
    An elephant requires a goad, and boiled rice a chilli (condiment.)

  3. ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
    An elephant is not affected by sunshine or rain.

  4. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
    The elephant has its time, the cat also has its time.

  5. ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
    Although dead, an elephant will fetch a thousand gold pieces.

  6. ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுகிறதோ ?
    What! does the hand that has caressed an elephant caress a sheep?

  7. ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்ளும்.
    The elephant will put sand on its own head.
    To see this done by wild elephants when travelling through a jungle is very interesting.

  8. ஆனை தன்னைக் கட்டச் சங்கிலியைத் தானே கொடுத்ததுபோல.
    As an elephant gives the chain to tether himself.
    Said of one who, whether consciously or not, supplies means to his own disadvantage.

  9. ஆனை துரத்திவந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
    Though chased by an elephant, it is not right to enter a temple.

  10. ஆனை நிழலைப் பார்க்கத் தவளை கலங்கினாற்போலே.
    As a frog trembled at the shadow of an elephant.

  11. ஆனை படுத்தால் ஆள்மட்டம்.
    When an elephant lies down its height will equal the stature of a man.

  12. ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா ?
    When an elephant lies down, will he be lower than a lamb?