Page:Tamil proverbs.pdf/109

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
91
  1. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா ?
    Are your eyes too dim to see an elephant?
    You must be blind indeed.

  2. ஆனை போன வீதி
    The street by which an elephant passed.

  3. ஆனைமிதிக்கப் பிழைப்பார்களா ?
    Has any survived after being trodden under foot by an elephant?

  4. ஆனை முட்டத் தாள் வானமுட்டப் போர்.
    Stubble as high as an elephant, stacks towering to the skies.

  5. ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?
    Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?

  6. ஆனைமேலே போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டாற்போல.
    Like asking chunam (lime) of one who is going along on an elephant.

  7. ஆனைமேல் இட்ட பாரம் பூனைமேல் இட்டாற்போல.
    As if an elephant’s load was transferred to a cat.

  8. ஆனையும் அறுகம்புல்லினால் தடைபடும்.
    Even an elephant may be impeded by arugu, Agrostis linearis, grass.
    This grass is sacred to Ganèsa.

  9. ஆனையும் ஆனையும் முட்டும்போது இடையில் அகப்பட்ட கொசுகுபோல
    As a gnat between two elephants that are brought into collision.

  10. ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
    Give an elephant to a pundit, and a cat to a mountaineer.

  11. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா ?
    Is he who slew an elephant unable to overcome a cat?