Page:Tamil proverbs.pdf/110

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
92
பழமொழி.
  1. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பானேன் ?
    After having paid a thousand gold pieces for an elephant, why hesitate to buy an iron goad?

  2. ஆனையைக் குத்திச் சுளகாலே மூடுவாள்.
    She will stab the elephant and cover it with a sieve.

  3. ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
    Having tied the elephant she will cover it with a winnowing fan?

  4. ஆனையைத்தேடக் குடத்துக்குள் கை வைத்ததுபோல.
    Like putting one’s hand into a water-pot in search of a missing elephant.

  5. ஆனையை விற்றுத் துறட்டிக்கு மன்றாடுகிறான்.
    Having sold the elephant he begs for the goad.

  6. ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா ?
    Can an alligator which can draw an elephant in water, drag a cat on dry ground?

  7. ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
    The sound of the bell is heard before the elephant makes its appearance.
    Spoken of events which cast their shadows before.

  8. ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா ?
    One can cross a river by holding the tail of an elephant, can one do so by holding the tail of a sheep?

  9. ஆனை விழுந்தால் கொம்பு, புலி விழுந்தால் தோல்.
    On the death of an elephant the tusk remains, on the death of a tiger the skin.