Page:Tamil proverbs.pdf/112

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
94
பழமொழி.
  1. இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.
    The right hand helps the left and the left the right.

  2. இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.
    One may not make friendship with him who does not know the right side from the left.
    Intimating that one must have nothing to do with fools.

  3. இடி ஓசை கேட்ட பாம்புபோல.
    Like a snake that has heard thunder.

  4. இடிக்குக் குடை பிடிக்கலாமா ?
    Will an umbrella be of any use in a thunder-storm?

  5. இடுகிற தெய்வம் எங்கும் இடும்.
    A liberal deity will give every-where.

  6. இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.
    In every place on which he reclined he constructed a hearth.
    Spoken of one who takes care of himself.

  7. இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற் குழியே கதி.
    The mortar hole is the asylum of the fowl with a broken back.

  8. இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.
    Oppressors sleep not day or night.

  9. இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.
    Alms-giving secures heavenly bliss.

  10. இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.
    The evil-disposed will destroy the good deeds of the beneficent.

  11. இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்ந்தாளாம்.
    It is said that she waited patiently for her mistress assured she would be rewarded; and at length she got a measure of rice, and her four desires were met.