Page:Tamil proverbs.pdf/120

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
102
பழமொழி.
  1. இருக்கும் இடம் ஏவுமா ?
    Will the place on which we sit, incite?

  2. இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.
    Oblations made to a demoness must not be kept till the morning.

  3. இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.
    He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.

  4. இருட்டு வேலையோ குருட்டு வேலையோ ?
    Was the work done in the dark or by the blind?

  5. இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா ?
    Will his thievish hand be restrained when he enters a dark room?

  6. இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.
    It is a sign of thievishness for a family to live in obscurity.

  7. இருதலை மணியன் பாம்பைப்போல.
    Like a snake that has a head at both ends.

  8. இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆனேன்.
    I have become like an ant on a fire-brand lighted at both ends.
    Spoken when in danger from opposite quarters.

  9. இருந்தல்லோ படுக்கவேண்டும் ?
    Must one not sit before lying down?

  10. இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.
    The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.

  11. இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.
    As the thunder-bolt fell on the head of the one who remained.