Page:Tamil proverbs.pdf/141

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
123
  1. உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.
    He that washes for him who kicks him is a first-rate washerman.

  2. உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.
    Contracts are needless as regards honest men and cheats. : The one needs no binding, and the other admits no obligations.

  3. உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.
    A faithful servant is more than a mother.

  4. உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
    The good are exposed to no danger.

  5. உத்தியோகம் புருஷ லஷணம்.
    Exertion is a manly quality.

  6. உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.
    Facilities suited to one's office.

  7. உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.
    It is unfortunate when evil is returned for good.

  8. உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.
    It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility.

  9. உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?
    What! are the civil to be requited by incivility?

  10. உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?
    Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?

  11. உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
    Can that which may be realized by cunning be obtained by force?

  12. உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.
    A salt-cup and a deceitful heart will of themselves come to destruction.