Page:Tamil proverbs.pdf/142

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
124
பழமொழி.
  1. உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
    A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.

  2. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
    Unsalted food is fit only for the rubbish heap.

  3. உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.
    Remember through life those who have given you salt.

  4. உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.
    Every thing from salt to camphor is required.
    Said of things domestic and sacred.

  5. உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.
    He who has eaten salt will drink water.

  6. உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.
    Thou starest as the Brahmanee who had lost her salted mutton.
    In her bewilderment she had no remedy because she dared not make known the loss of a thing she ought not to have had in her possession.

  7. உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?
    Does the salt merchant know the price of camphor?

  8. உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.
    If there be a supply of salt the world will be sustained.

  9. உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
    Are salt and camphor used together?

  10. உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.
    If the ocean were to become clouds, the world would be flooded.

  11. உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா?
    Must the root of cusa grass be added to sea-water to make it fragrant?