Page:Tamil proverbs.pdf/143

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
125
  1. உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
    Excess of salt calls for water, excess of water requires salt.

  2. உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?
    Did you spill the salt or the food?

  3. உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.
    Do not use salt both as food and condiment.

  4. உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.
    Using salt as a condiment you may swallow a mortar.

  5. உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
    Nine things are required with salt, ten with pulse.

  6. உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?
    Have you grown grey by age, or is your hair prematurely grey?

  7. உமியைக் குற்றிக் கைசலித்ததுபோல.
    As the hand was wearied by beating husks in a mortar.

  8. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?
    Though it may fly high, will a common bird become a hawk?

  9. உயிரும் உடலும்போல.
    Like soul and body.

  10. உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
    It is more natural to die than to continue in life.

  11. உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?
    Will he who would not turn to look at me when alive kiss me when dead?

  12. உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
    Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?