Page:Tamil proverbs.pdf/144

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
126
பழமொழி.
  1. உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.
    If one is alive, he may subsist by bartering salt.

  2. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
    Will that which is in the mortar escape the pestle?

  3. உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?
    Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?

  4. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
    The mortar is beaten at one end, the drum at both.

  5. உரல் பஞ்சம் அறியுமா ?
    Does the rice mortar know what a famine is?

  6. உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.
    As the mortar went to the tomtom with its complaints.
    Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.

  7. உரு ஏறத் திரு ஏறும்.
    Supernatural power increases according to the intensity of the incantations.

  8. உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.
    O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.

  9. உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.
    The cat that has tasted nice things will leap on the swinging-tray.

  10. உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
    When one deals fraudulently, even that which he has diminishes.

  11. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
    Frauds and tricks will destroy reputation.