Page:Tamil proverbs.pdf/146

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
128
பழமொழி.
  1. உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.
    The pestle grew and became a beam.

  2. உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
    Nothing can be compared to the banquet of a miser.

  3. உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?
    You may cover the mouth of a rice-pot, but can you cover the mouth of the country?

  4. உலோபிக்கு இரு செலவு.
    The avaricious are subject to double expense.

  5. உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
    An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.

  6. உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?
    If it be too cold to plough, why not put out the young plants?

  7. உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.
    A quarter of a measure to one’s friends, and sixteen measures to a religious mendicant.

  8. உழக்கிலே கிழக்கு மேற்கா?
    Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?

  9. உழக்கிலே வழக்கு.
    A dispute about an ullak.
    See the preceding.

  10. உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?
    Why give a measure of pepper, why drink the pepper water in a corner?

  11. உழவிற்கு ஏற்ற கொழு.
    A plough share adapted to the tillage.