Page:Tamil proverbs.pdf/167

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
149
  1. எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.
    A brilliant crown for an illustrious family.

  2. எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?
    It is questionable which will be first consumed, the oil or the wick.

  3. எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?
    Although oil may be washed off, can the writing of Brahma be rubbed off?

  4. எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.
    As regards the child's recovery, nothing has resulted but an expenditure of oil.

  5. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்புபோல.
    Like ants round a pot of oil.

  6. எண்ணெய்ப் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ ?
    Is the beauty attributable to oil, or is it real?

  7. எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.
    He who excels in figures excels in strength.

  8. எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.
    If you speak a word, I will place before you an empty ladle.

  9. எதார்த்தவாதி வெகு சன விரோதி.
    He who is truthful may be the enemy of many.

  10. எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.
    If the opposite party be inferior in position, the anger of his enemy will rage like a tempest.

  11. எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா ?
    What, is it to yield to an opponent?

  12. எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
    The house opposite is the washerman’s, and my next door neighbour is a barber.