Page:Tamil proverbs.pdf/179

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
161
  1. எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.
    Everywhere present as oil throughout the sesamum seed.

  2. எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
    Ploughing seven times for sesamum seed, once for gram.

  3. எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது?
    Sesamum seed is dried for oil; but why dry rat-dung?

  4. எள்ளும் பச்சை அரிசியும்போல இருக்கவேண்டும்.
    It must be as sesamum seed and raw rice.

  5. எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும்.
    Sesamum seed and sugarcane yield a profit when pressed.

  6. எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.
    O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough once for horse-gram and thus cultivate the ground.

  7. எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.
    Throwing at a hare and hitting a bush.

  8. எறிவானேன் சொறிவானேன்?
    Why throw, why scratch?
    Why provoke a nuisance?

  9. எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
    Canst thou not bear the bite of an ant?

  10. எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது.
    The eyes of an ant are large in proportion to its size, the eyes of an elephant are small for its size.

  11. எறும்புக்குக் கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்.
    A cocoanut shell-full of water is an ocean to an ant.

11