Page:Tamil proverbs.pdf/182

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
164
பழமொழி.
  1. என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.
    No matter how long one may live, the day of death will come.

  2. என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.
    Say what you may, I will not change my mind.

  3. என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.
    O! mendicant, the thirty days of September are all days of receipt.

  4. என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.
    You fellow, you affect to speak in an elegant style.

  5. என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
    No instruction however explicit or agreeable will enter the ear of an ass.

  6. என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.
    What is the deception practised by the dairy maid? It is mixing water with butter-milk.

  7. என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.
    If one say, fie on thee, thou art destroying thyself, he replies, I will take a bet that I will exceed my former course.

  8. என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.
    No matter what may be eaten; if four dates be taken afterwards, the whole will be digested.

  9. என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.
    Since the woman came to my house, even gold has become a common thing.